கோவில்பட்டியில் மிக பிரம்மாண்டமான நடந்த பஜ்ரங் நர்த்தனாலயா சார்பில் 5வதுஆண்டு சலங்கை பூஜை நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு
மிக பிரம்மாண்டமான நடந்த பஜ்ரங் நர்த்தனாலயா சார்பில் 5வது ஆண்டு சலங்கை பூஜை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து 10 மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னால் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பரதநாட்டியம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு பள்ளி மாணவிகள் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட குழு தலைவி சத்தியா, கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், கழகப் பேச்சாளர் பெருமாள் சாமி, பஜ்ரங் நர்த்தனாலயா இயக்குனர் கோவில்பட்டி கார் வியாபாரிகள் நல சங்க பொருளாளர் கணபதி, பஜ்ரங் நர்த்தனாலயா பரதநாட்டிய பயிற்சியாளர் யுவஸ்ரீ கணபதி, மற்றும் பள்ளி மாணவிகள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.