தமிழகத்தில் அடுத்த மாதம் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுதாக்கலும் நேற்று தொடங்கியுள்ளது. இதையெடுத்து அனைத்து கட்சியினரும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, பிரச்சரம் குறித்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக பட்டாளி மக்கள் கட்சி அறிவித்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் மீட்டிங் ஹாலில்
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் அதன் மாவட்ட செயலாளர் ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் கருப்பசாமி வரவேற்புரையாற்றினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில இணை செயலாளர் இசக்கிபடையாச்சி கலந்து கொண்டு தேர்தல் பணிகள், வேட்பாளர்கள் தேர்வு, பிரச்சாரம் குறித்து எடுத்துரைத்தார்.
அப்போது அவர் பேசுகையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அதிமுக நடத்தவில்லை தற்பொழுது அறிவிக்கப்பட்டு இருந்தாலும் 5 நாள்கூட அவகாசம் கூட கொடுக்கமால் அறிவித்துள்ளனர். இதனை பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டித்துள்ளனர். கால அவகசாம் குறைவாக இருப்பதால் கட்சியினர் விரைந்து செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்டதலைவர் மாடசாமி ,மாவட்ட அமைப்பு செயலாளர் காளிராஜ் ,மாநிலத் துணை அமைப்பு செயலாளர் கருப்பசாமி, நகர பொருளாளர் வள்ளியம்மாள் ,முன்னாள் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி ,மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன் ,மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து ,மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் ,கழுகுமலை நகர செயலாளர் காளிராஜ் , கடம்பூர் நகர செயலாளர் கார்த்திக் ராஜா ,கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார்,
விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ் ,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் பேச்சிமுத்து ,எட்டையாபுரம் நகரச் செயலாளர் செல்வம் ,உட்பட ஏராளமானோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிறைவாக கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் நன்றி தெரிவித்தார்.