இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 லட்சம் மதிப்பிலான ஒரு டன் மஞ்சள் பறிமுதல்.!


மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 லட்சம்  மதிப்பிலான ஒரு டன் மஞ்சள் பறிமுதல், கியூ பிரிவு போலீஸார் நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை தெற்கு கடற்கரை பகுதியில் முகமது அலி ஜின்னா  என்பவருக்கு சொந்தமான வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு டன் சமையல் மஞ்சள் பதுக்கி வைத்திருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.


இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற கியூ பிரிவு ஆய்வாளர் மகேஸ்வரி , கியூ பிரிவு  போலீசார், மண்டபம் எஸ் பி காவலர் கேசவன் உட்பட காவலர்கள் , இலங்கைக்கு  கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த  சமையல் மஞ்சளை  பறிமுதல் செய்து மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மேலும் பறிமுதல்  செய்யப்பட்ட மஞ்சளின்  சர்வதேச மதிப்பு 4 லட்சம்  ரூபாய் இருக்கும் என  போலீசார் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post