விருதுநகர் மாவட்டம், களத்தூர் கிராமத்தில், ஆர் கே வி எம் என்ற பெயரில் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இது மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வழிவிடும் முருகன்என்பவருக்கு சொந்தமானதாகும்.
இங்கு 10க்கும் மேற்ப்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை கலவை செய்யும் பணிகள் நடைபெற்று வந்தது .அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது .இந்த விபத்தில் தொழிற்சாலையின் அறைகள் சேதமடைந்தன. தொழிற்சாலையின் மேற்பார்வையாளரான மேட்டுப்பட்டியை சேர்ந்த குமார், சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த பெரியசாமி, பாறைப்பட்டியைச்சேர்ந்த செல்வம்(எ) வீரக்குமார், முருகேசன் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
-விருதுநகர் சங்கர்