அரசு மருத்துமனைக்கு வந்த கர்ப்பிணி பெண்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து ரூ.37 ஆயிரம் வசூலித்த அரசு பெண் டாக்டர் அந்த பணத்தை திருப்பித் தர திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவை சேர்ந்தவர் மருதமுத்து (33). தேங்காய் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜராஜேஸ்வரி (24). இந்த தம்பதிக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.இந்நி லையில், ராஜராஜேஸ்வரி மீண்டும் கர்ப்பமானார். அவர், கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த செப்டம்பர் 23ம் தேதி ராஜராஜேஸ்வரிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுக் கப்பட்டதில், சிசு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். உடனடியாக உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு பணியில் இருந்த பெண் டாக்டர் ஜோதிமணி சரிவர சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனியார் மருத் துவமனையில் ரூ.37 ஆயி ரம் கட்டி இறந்தநிலையில் பெண் சிசு வெளியே எடுக் கப்பட்டது. அங்கு அரசு மருத்துவமனை டாக்டர் ஜோதிமணியே சிகிச்சை அளித்துள்ளார்.
இது பற்றி தம்பதியர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம் புகார் தெரிவித்தனர். அதைதொடர்ந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்ப ணிகள் இணை இயக்குநர் மற்றும் உடுமலை கோட்டாட்சியர் ஆகியோர் அரசு மருத்துவமனையில் விசாரித்து அறிக்கை அளித்தனர். அதன் அடிப்படையில் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் படி அரசு மருத்துவமனையில் பணிபு ரியாமலும், நோயாளிக்கு முறையான சிகிச்சை அளிக் காமலும், கட்டணம்பெறும் நோக்கில் தனியார் மருத் துவமனைக்கு அழைத்து சென்று, ரூ.37 ஆயிரமும் வசூலிக்கப்பட்டுள்ளது. '
எனவே, அந்த பெண் ணிடம் பெறப்பட்ட ரூ.37 ஆயிரத்தை டாக்டர் ஜோதி மணி திருப்பி ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப் படைக்காத பட்சத்தில் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உத்தரவிட் டுள்ளார். பெண் டாக்டர் ஜோதிமணி ஏற்கனவே நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அதிரடியாக மாற்றப்பட் டுவிட்டார்.