இந்தியாவில் ஓமிக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில், 3வது அலையின் உச்சத்தில் நாள்தோறும் 60,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த அறிக்கை என்டிடிவியின் மெஹர் பாண்டே மற்றும் சௌரப் குப்தா ஆகியோரால் ஆய்வு செய்யப்பட்ட பிரத்யேக தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது, மேலும் ஓமிக்ரான் சுகாதார நெருக்கடி இந்தியாவை மிக விரைவில் தாக்கக்கூடும் என்றும், ஓமிக்ரான் இப்போது இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் எச்சரிக்கிறது.
ஓமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,700 என்ற அளவில் இருப்பதாக ஒன்றிய அரசால் கூறப்பட்டாலும் உண்மையில் இது 10 மடங்கு அதிகமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மரபணு பகுப்பாய்வு ஆய்வகங்கள் குறைவாக இருப்பதன் காரணமாக அதிக ஓமிக்ரான் பாதிப்புகள் வெளியே தெரியாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
2வது அலை உச்சத்தின் போது நாள் ஒன்றுக்கு 24,000 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 3வது அலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 60,000 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.