சென்னையில் பெருங்குடி பகுதியில் கடன் தொல்லை காரணமாக மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வங்கி அதிகாரி மணிகண்டன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த மணிகண்டன் பலரிடம் கடன் வாங்கியதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் மனைவி தாராவை(40) கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்று விட்டு, மகன்கள் தரண்(10), தகன்(1) ஆகியோரை தலையணையால் அழுத்தி கொலை செய்து வங்கி அதிகாரி மணிகண்டன்(45) தானும் தற்கொலை செய்து கொண்டார் என முதற்கட்ட விசாரணையில் தகவல்.