சுதந்திரப் போராட்ட தியாகி வீரபாண்டிய கட்டபொம்மனின் 263 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே கயத்தாரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட தியாகி வீரபாண்டிய கட்டபொம்மனின் 263 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறில் சுதந்திர போராட்ட தியாகி வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபத்தில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அதிமுக நகர செயலாளர் விஜய பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்தியா,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார்,
ஒன்றியச் செயலாளர்கள் வினோபாஜி, அன்புராஜ்,அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிராம் அய்யாதுரை, மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ்,நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கவியரசன்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் போடு சாமி,கழகப் பேச்சாளர் பெருமாள் சாமி,
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன்,முன்னாள் கவுன்சிலர் ஜெமினி என்ற அருணாச்சலம், ஜெயந்தி சரவண சாமி,உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தியாகி வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.