20 வயது இளம் பெண்னை 18 நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் - - நீட் பயிற்சி சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடுமை! - 3 பேர் கைது!

20 வயது இளம் பெண்னை 18 நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் -  - நீட் பயிற்சி சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடுமை! - 3 பேர் கைது!

நீட் தேர்வுக்கு ஆயத்தமாக பயிற்சிக்கு சென்று கொண்டிருந்த  20 வயது பெண்ணை, மூன்று பேர் தூக்கிச் சென்று, 18 நாட்கள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் பொடாட் மாவட்டத்தில் 20 வயது பெண் ஒருவர், மூன்று பேர் தன்னை கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் குறைந்தது 18 நாட்கள் (டிசம்பர் 9-டிசம்பர் 26) அடைத்து வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தததாக மூன்று பேர் மீது புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் 22 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் அவர்கள் மீது திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் விசாரணையில், பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்த பண்ணை வீடு குற்றம் சாட்டப்பட்ட மூவரில் ஒருவருக்கு சொந்தமானது என்பதும், அவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரிந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த பெண், தான் பண்ணை வீட்டிற்குச் சென்றபோது, ​​குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரும் மது அருந்திவிட்டு மாறி மாறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். மேலும் டிசம்பர் 26 அன்றுதான் மூன்று பேரும் பண்ணை வீட்டிலிருந்து தன்னை விடுவித்ததாக கூறினார் .

விடுவிக்கப்பட்ட பிறகு, அந்தப் பெண் ஜாம்நகரில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்குச் சென்று அவர்களிடம் நடந்த விஷயத்தை விவரித்தார்.  இதையடுத்து அவர்கள் ஜாம்நகர் காவல் துறையில் புகார் அளிக்க, பொடாட் போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.

இந்த வழக்கு குறித்த விசாரணையில் தொடர்புடைய ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், "குற்றஞ்சாட்டப்பட்ட மூவரையும் நாங்கள் கைது செய்துள்ளோம். தற்போது, ​​அவர்கள் காவலில் உள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மகளிர் போலீஸ் கான்ஸ்டபிள்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்"என்றார். அந்தப் பெண் ராஜ்கோட்டில் நீட் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தவர் ஆவார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post