தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.அருகில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உடனிருந்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இன்றைய தினம் முதல் 15 -18 வயது உள்ள மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை முதல்வர் துவக்கி வைத்துள்ளார்கள் அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சுப்பையா வித்யாலயா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 15-18 வயது உள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உளள் 335 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 15-18 வயது உளள் 81,000 மாணவர்கள் பயில்கிறார்கள். இம்மாணவ, மாணவியாக் ளுக்கு கோவாக்சின் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட உள்ளது.
இந்தப் பணியை தூத்துக்குடி மாவட்ட பொது சுகாதாரத்துறையும் கல்வித்துறையும் இணைந்து அந்தந்த பள்ளி வளாகத்திலேயே மருத்துவக் குழுக்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்பார்வையில் 15-18 வயது உள்ளமாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
18 வயதுக்கு மேல் உள்ள சுமார் 18 லட்சம் பொதுமக்கள் உள்ளனர். இதில் சுமார் 13 லட்சம் நபர்கள் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தி உள்ளார்கள். 7.85 லட்சம் நபர்கள் கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் செலுத்தி உள்ளார்கள்.
எனவே பள்ளி மாணவ, மாணவர்களின் பெற்றோர்கள் இந்த கொரோனா தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மாணவ, மாணவியர்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு. பொற்செல்வன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, சுப்பையா வித்யாலயா மகளிர் மேல்நிலைப்பள்ளி செயலர் முரளிகணேஷ், தலைமை ஆசிரியர் சாந்தினி ஹசல் மற்றும் அலுவலர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர்.