தேனி மாவட்டத்தில் 15-வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி -மாவட்ட கலெக்டர் முரளீதரன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.!

தேனி, ஜனவரி - 3 


தேனி மாவட்டம் தேனி-அல்லிநகரம் நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 15-வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை நேற்று மாவட்ட கலெக்டர் க.வீ.முரளீதரன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் ,சரவணக்குமார் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது,

 கொரோனா நோய்த் தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலையை தொடர்ந்து புதிதாக உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் அச்சுறுத்திக் கொண்டிருப்பதன் அடிப்படையில்  தமிழக முதலமைச்சர் அவர்கள் கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்திடும் பொருட்டு  தமிழகம் முழுவதும் போர்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி கொரோனா நோய்த் தொற்றினை தடுப்பதற்கு கொரோனா தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியினை துரிதப்படுத்தியுள்ளார்கள்.  

அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் தற்சமயம் வரை மொத்தம் 17 மாபொரும் தடுப்பூசி முகாம்கள் மற்றும் தினந்தோறும் அதனைத்தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் முதற்கட்டமாக தேனி-அல்லிநகரம் நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலுகின்ற 483 மாணவ, மாணவியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக, ஆண்டிபட்டி வட்டாரத்தில் 30 பள்ளிகளில் பயிலுகின்ற 5,263 மாணவ, மாணவியர்களுக்கும், போடிநாயக்கனூர் வட்டாரத்தில் 27 பள்ளிகளில் பயிலுகின்ற 7,376 மாணவ, மாணவியர்களுக்கும், சின்னமனூர் வட்டாரத்தில் 26 பள்ளிகளில் பயிலுகின்ற 3,786 மாணவ, மாணவியர்களுக்கும், கம்பம் வட்டாரத்தில் 35 பள்ளிகளில் பயிலுகின்ற 6,491 மாணவ, மாணவியர்களுக்கும், மயிலாடும்பாறை வட்டாரத்தில் 16 பள்ளிகளில் பயிலுகின்ற 2,420 மாணவ, மாணவியர்களுக்கும், 

பெரியகுளம் வட்டாரத்தில் 36 பள்ளிகளில் பயிலுகின்ற 7,421 மாணவ, மாணவியர்களுக்கும், தேனி வட்டாரத்தில் 33 பள்ளிகளில் பயிலுகின்ற 11,768 மாணவ, மாணவியர்களுக்கும், உத்தமபாளையம் வட்டாரத்தில் 20 பள்ளிகளில் பயிலுகின்ற 6,613 மாணவ, மாணவியர்களுக்கும் என மாவட்டத்தில் மொத்தம் 223 பள்ளிகளில் பயிலுகின்ற 51,138 மாணவ, மாணவியர்களுக்கு அந்தந்த பகுதிகளிலுள்ள மொத்தம் 41 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் வாயிலாக தடுப்பூசி செலுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இப்பணியானது மாவட்டத்திலுள்ள அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டு, தொடந்து சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும்.

கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுத்திடும் பொருட்டும், தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடித்து, தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் பாதுகாத்து, தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பிரவீன்  உமேஷ் டோங்கரே, முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு. ஜெகவீரபாண்டியன் உட்பட கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

   

தேனி செய்தியாளர், ரா.சிவபாலன்....

Previous Post Next Post