கோவில்பட்டியில் 15 - 18 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ தொடங்கி வைத்தார்


கோவில்பட்டி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 15 முதல் 18 வயது உள்ள மாணவ மாணவிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

இந்தியா முழுவதும் 15 வயது முதல் 18 வரை உள்ள மாணவ மாணவிகள் கொரோனா தடுப்பூசி பணி இன்று துவங்கியது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயது உள்ள 9,10,11,12, வகுப்பு மாணவ-மாணவிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை 



முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஷோபனா,சுகாதாரத்துறை ஆய்வாளர் நவீன்,செவிலியர் முகிலா, தலைமையாசிரியர் ராஜமாணிக்கம், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்,

அதிமுக நகர செயலாளர் விஜய பாண்டியன்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, ஒன்றியச் செயலாளர் அன்புராஜ்,அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிராம் அய்யாதுரை,நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கவியரசன்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் போடு சாமி,கழகப் பேச்சாளர் பெருமாள் சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முன்னாள் கவுன்சிலர் ஜெமினி என்ற அருணாச்சலம்,ஜெயந்தி சரவண சாமி,உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post