போலீஸ் மீது தாக்குதல் -பாஜக மாநில தலைவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.!



தெலங்கானா மாநில பாஜக தலைவரும், எம்.பி.யுமான பாண்டி சஞ்சய்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவின் கரீம்நகர் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த போராட்டத்தில் காவல்துறையினரைத் தாக்கியதற்காகவும், பேரிடர் மேலாண்மை (டிஎம்) சட்டத்தை மீறியதற்காகவும் மாநில பாஜக தலைவரும் எம்பியுமான பண்டி சஞ்சய் குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

காவல்துறையினரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கரீம்நகர் மாவட்ட நீதிமன்றம் அவரை 14  நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கரீம்நகர் போலீஸ் கமிஷனர் சத்யநாராயணா செய்தியாளர்களிடம் கூறுகையில், எம்.பி மற்றும் கைது செய்யப்பட்ட மற்ற நபர்கள் கோவிட் -19 சோதனைகள் மற்றும் பிற மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

சஞ்சய் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஏராளமான பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், காவல் பயிற்சி மையத்தில் பதற்றம் நிலவியது. முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் கரீம்நகர் போலீஸ் கமிஷனருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டக்காரர்கள் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

டூ டவுன் காவல் நிலையத்தில் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சத்தியநாராயணா கூறினார். ஒரு வழக்கில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததற்காகவும், முகமூடி அணியாததற்காகவும் பேரிடர் மேலாண்மை சட்டம் பிரிவு 51 (பி) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 188 இன் கீழ் 21 பேர் மற்றும் மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. குறைந்தது 70 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி விடுவிக்கப்பட்டனர்.

மற்றொரு வழக்கில், டிஎம் சட்டத்தை மீறியது தவிர, கலவரம் மற்றும் போலீஸ் அதிகாரிகளைத் தாக்கியதற்காக 16 பேர் மற்றும் மற்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சஞ்சய் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஐபிசி பிரிவுகள் 188, 332, 333, 149, 147, 188 மற்றும் டிஎம் சட்டத்தின் பிரிவு 5 (பி) ஆகியவற்றைப் பயன்படுத்தியது.

இந்த தாக்குதலில் ஒரு உதவி காவல்துறை ஆணையர் மற்றும் ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உட்பட பல காவலர்கள் காயமடைந்ததாக காவல்துறை தலைவர் கூறினார்.




Ahamed

Senior Journalist

Previous Post Next Post