இலங்கை கடற்படையால் தமிழகத்தை சேர்ந்த 10 விசைப்படகையும், 68 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைத்தது
இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி கடந்த 11 நாட்களாக கடலுக்கு யாரும் வேலைக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையில் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததையடுத்து மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெற்று 3ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க செல்வோம் என்று அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று 14 நாட்கள் கழித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை மீனவர்கள் பெற்றனர்.
இதையடுத்து மீன் பிடிப்பதற்கான வலைகள், ஐஸ்கட்டி, குடிதண்ணீர், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மீனவர்கள் தங்களுடைய படகுகளில் ஏற்றிக்கொண்டு 14 நாள்கள் கழித்து 500க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.