சிறப்பாக பணியாற்றிய 11 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்.பி வெகுமதி வழங்கி பாராட்டு


தூத்துக்குடி  மாவட்டம் தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2018ம் ஆண்டு நடைபெற்ற திருட்டு வழக்குகளில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த 2 எதிரிகளை கைது செய்த  

தருவைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன், தலைமை காவலர் கணேசன் மற்றும் முதல் நிலை காவலர் பிரபாகரன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரியை கைது செய்தும், அவரிடமிருந்து திருடிய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் காவலர் தங்கபாண்டி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாரி திருட்டு வழக்கில் ஈடுபட்ட 4 எதிரிகளில் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்த எதிரியை கைது செய்த சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிராங்க் ஸ்டீபன், 

முறப்பநாடு காவல் நிலைய தலைமை காவலர் சுந்தர்ராஜ், தட்டப்பாறை காவல் நிலைய முதல் நிலை காவலர் கணேசன் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய காவலர் மீனாட்சிசுந்தரம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 2009ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளில் சம்மந்தப்பட்டு நீதிமன்ற பிடியாணை நிலுவையில் இருந்த எதிரியை கைது செய்ய உதவியாக இருந்த  ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய முதல் நிலை காவலர் மாணிக்கவாசகம் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 77 வழக்குகளை கோப்புக்கு எடுத்தும், 6 வழக்குகளில் நீதின்ற விசாரணையை முடித்த புதூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் ரவிக்குமார் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 11 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Previous Post Next Post