வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் துன்பகரமானது என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இன்று, நாம் புத்தாண்டில் நுழையும் வேளையில், கடந்த ஆண்டில் நமது முயற்சிகளில் இருந்து கிடைத்த உத்வேகத்தை கொண்டு, புதிய தீர்மானங்களை நோக்கி நகர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இன்று ஒவ்வொரு இந்தியனின் சக்தியும் ஒரு கூட்டு சக்தியாக மாறி, நாட்டின் வளர்ச்சிக்கு புதிய வேகத்தையும் புதிய ஆற்றலையும் அளித்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் உறுதியுடன் துடிப்பான புதிய பயணத்தை தொடங்குவதற்கான நேரம் இது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் 10 வது தவணையாக விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி இன்று விடுவித்தார்.