இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்தின் பக்கவாட்டில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தனர் அப்பொழுது அந்த வழியாக வந்த தனியாருக்கு சொந்தமான திருமுருகன் மினி பேருந்து கார்த்திக்  தலைமீது ஏறி இறங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயமடைந்த அவர் நண்பர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸ் வாகனத்திலேயே கொண்டு சென்றனர்.

Previous Post Next Post