நெல்லையில் ஆம்புலன்ஸில் பிறந்தபெண் குழந்தை

நெல்லை செய்தியாளர் டேவிட்


நெல்லை டிச.01

இன்று அதிகாலை 4 மணி அளவில் முனைஞ்சிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மாயநேரியை சேர்ந்த அபிராமி வயது 21 பிரசவ வலி ஏற்பட்டு முனைஞ்சிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார்.

அங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருந்தும் பிரசவம் பார்க்க இயலாது என்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் போன் செய்து ஆம்புலன்ஸ் சேவையை நாடினர்.

மூன்றடைப்பை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் துரிதமாக முனைஞ்சிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பிரசவ வலியில் துடித்த அபிராமியை ஆம்புலன்சில் ஏற்றி முதலுதவி செய்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் போது ரெட்டியார்பட்டி அருகில் சிவந்திபட்டி மலையில் செல்லும்போது 108 ஆம்புலன்சில் அபிராமிக்கு பிரசவம் பார்க்கப்பட்டது 

அதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது அவர்கள் உறவினர்களும் அவர் கணவா் முத்துக்குட்டி மிகவும் சந்தோஷப்பட்டனர் மிகவும் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் டெக்னீசியன் அதாவது EMT பார்வதியும் மற்றும் ஓட்டுநர் சுடலைக்கண்ணுக்கும் உறவினர்கள் நன்றி மட்டும் பாராட்டுக்களை தெரிவித்தனர். அதன் பின் தாயும் சேயும் நலமுடன் பாதுகாப்பாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

Previous Post Next Post