தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை காணொளி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இந்து சமய அறநிலையத் துறை மற்றும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டது
இந்த கல்லூரி தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்தநிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன்,மீன் வளம்,மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் கல்லூரியின் நுழைவாயிலை அமைச்சர்கள் கீதாஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்து கல்லூரியில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கோட்டாட்சியர் சங்கரநாராயணன், விளாத்திகுளம் தாசில்தார் விமலா, கல்லூரி முதல்வர் ஜெயலி லசிதா, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் இணை ஆணையர் குமரதுரை,
திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.