பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்.!




ராமேசுவரம்,டிச.02: 

தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு தொலை தூர எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உறுவாகி உள்ளது. இது ஆந்திரா மாநிலம் விசாகபட்டத்தில் இருந்து தென்கிழக்கு சுமார் 960 கி.மீட்டர் தொலைவிலும்,ஒடிசா கோபால்பூரின் பகுதியில் இருந்து தென்கிழக்கு 1020 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம்,வங்க கடலில் மீன்பிடிக்கும்  மீனவர்களுக்கு தொலை தூர எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு 10.30 மணிக்கு ஏற்றப்பட்டது.

தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக ராஜா செய்தியாளர்  

Previous Post Next Post