சேலம் ஆனந்தா இறக்கம் அருகே உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் சேலம் வாசவி நற்பணி மன்றத்தின் சார்பில் உலக நன்மைக்காக கொரோனா,ஒமிக்ரான் வைரஸ் தொற்றியிருந்தது மக்களை காக்க மற்றும் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு புஷ்பாஞ்சலி மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த வருடமும் அதே போல் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பனுக்கு பால், தயிர்,மஞ்சள், திரு மஞ்சள், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் நெய்,சந்தனம் போன்றவற்றால் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது இதனை தொடர்ந்து பட்டாடை நறுமண மலர் மாலைகள் கற்கள் பதித்த நகை ஆபரணங்கள் சூட்டி திருக்கோவில் அர்ச்சகர் சீதாராமய்யர் சிறப்பாக அலங்காரம் செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து ரோஜா,அரளி, மல்லிகை, சம்பங்கி, துளசி, சாமந்தி போன்ற பல்வேறு விதமான நறுமண மலர்களால் புஷ்பாஞ்சலி மிக சிறப்பாக நடைபெற்றது.பின்பு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் விபூதி குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்சி ஏற்பாடுகளை ஜெ.சுரேஷ், ஜீ.சுப்புராம கிருஷ்ணன், சுரேஷ் பாபு,கே.உதயகுமார்,கே.எம்.ரமேஷ்பாபு, ஈஸ்ட்டு வெஸ்ட்டு மோகன்,ராம கிருஷ்ணன் ஆகியோர் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.