அடிப்படை வசதிகள் வேண்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்.!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 32வது வார்டு நகராட்சிக்குட்பட்ட ஓடைத் தெரு அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலை வசதி,கழிவுநீர் வாய்க்கால் வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரக்கோரியும் 

கழிவு நீர் கால்வாய் பிரச்சினை காரணமாக அப்பகுதியில் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே பிரச்சனையை உடனடியாக சரி செய்து தரக்கோரி நாம் தமிழர் கட்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மாரியப்பன் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post