தமிழக நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பி. பழனிவேல் தியாகராஜன் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் சாமி தரிசனம்.
தமிழக நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பி. பழனிவேல் தியாகராஜன், தனது மனைவி மற்றும் மகனுடன் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வந்திருந்தார், அவர்களை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் ராமேஸ்வரம் நகர் தலைவர் நாசர் கான் வரவேற்றார்.
கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு விநாயகர் சன்னதி முன்பாக திருக்கோவில் சார்பாக குருக்கள் மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து தனது குடும்பத்துடன் ராமநாதசாமி மற்றும் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார், தரிசனத்திற்கு பிறகு மதுரை புறப்பட்டு சென்றார்.