சேலம் சீரடி சாய்பாபா திருக்கோவிலில் கும்பாபிஷேகம்.!


சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஒன்றியம் மாசிநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா மற்றும் குபேர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 48 ஆம் நாள் மண்டல பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதிகாலை முதல் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது பின்பு ஸ்ரீ சீரடி சாய்பாபா விற்க்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. புது பட்டாடை உடுத்தி பட்டு கிரீடம் அணிவிக்கப்பட்டது. 

பின்னர் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலுக்கு ஊர்வலமாக மாலைகள் எடுத்து வரப்பட்டு நறுமண மலர் மாலைகள் சூட்டி சிறப்பாக அலங்காரம் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து மஹா கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. 

திடீரென சாய்பாபாவின் திருமேனியில் இருந்து விபூதி வந்து கொண்டிருந்தது. இந்த அதிசய நிகழ்வை அப்பகுதி மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கன்டுகலித்தவுடன்‌  ஸ்ரீ சாய் பாபாவின் தரிசனத்தை பெற்றனர். 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சீரடி சாய்பாபாவையும் குபேர ஆஞ்சநேயருக்கும் தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்சி ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகி சாய்பிரபா சிறப்பாக செய்திருந்தார்.

Previous Post Next Post