புத்தாண்டு கொண்டாட்டம்.! - டிஜிபி தடை.!


தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் காரணமாக வருகிற 31ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட பொதுமக்களுக்கு காவல்துறை தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது... டிசம்பர் 31ம் தேதி அன்று இரவு தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீடுகளிலேயே அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். 

டிசம்பர் 31ம் தேதியன்று மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. மீறினால் டிரைவர்கள் கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

அவசர உதவி தேவைப்பட்டால் 100, 112 எண்களை தொடர்பு கொள்ளுமாறும், KAVALAN SOS செயலியை பயன்படுத்தமாறும் தமிழக டி.ஜி.பி. வலியுறுத்தியுள்ளார்.

Previous Post Next Post