சேலம் மாநகர் 37 வது வார்டு மாருதி நகர் சுற்று வட்டார பகுதியில் கடந்த 8 வருடங்களாக சரி செய்யப்படாத சாலைகள்,கழிவுநீர் வசதி மழைநீர் வீடுகளுக்குள் புகும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது.
பலமுறை மனு அளித்தும் பயனில்லை பலமுறை போராட்டம் நடத்தியும் பயனில்லை. எனவே பொதுமக்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம் அலுவலகம் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
அம்மாபேட்டை மண்டலம் துணை ஆணையாளர் மற்றும் அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் நாளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலை 8:30 மணி அளவில் மாருதி நகருக்கு வருகை தந்து அனைத்து பிரச்சனைகளும்
சரி செய்து தருவதாக வாக்குறுதியை கட்சியின் நிர்வாகிகளிடம் அளித்ததன் காரணமாக போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.