கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம்,சிறு முகை புதூர் தேவாங்கர் சமுதாய மண்டபத்தில்,இந்திய அரசு ஜவுளி அமைச்சகம், டெக்ஸ்டைல்ஸ் கமிட்டியின் சார்பில் கைத்தறி முத்திரை திட்டம் மற்றும் கைபேசி செயலி மற்றும் இணையதளம் தொடர்பான கிளஸ்டர் அளவிலான விழிப்புணர்வு கருத்தரங்கு கோவை கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் செ.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சேலம் நெசவாளர் சேவை மைய துணை இயக்குனர் கார்த்திகேயன்,கோவை மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத்தலைவர் வி. ரவிக்குமார்,கோவை கோ- ஆப்டெக்ஸ்வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி பிரிவு முதுநிலை மேலாளர்
வி. அன்பழகன், கோயம்புத்தூர் டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி உதவி இயக்குனர் மற்றும் பொறுப்பாளர் ஜி.வேணுகோபால், டெக்ஸ்டைல் கமிட்டி தரநிர்ணய அதிகாரி டி.சுப்பையா,சேலம் தொழிலாளர் சேவை மைய தொழில்நுட்ப கண்காணிப்பாளர் ஆர்.கே. அருள் தீபக் ஆகியோர் கலந்து கொண்டு கைத்தறி முத்திரை திட்டம்,கைத்தறி முத்திரை திட்டம் கைபேசி, செயலி மற்றும் இணைய தளம், மற்றும் இந்திய கைத்தறி பிராண்ட் ஆகிய கருத்துக்களில் கருத்துரை வழங்கினார். முன்னதாக ஜி.வேணுகோபால் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற நெசவாளர்களின் சந்தேகங்களுக்குகருத்தாளர்கள் விளக்கம் அளித்தனர்.
தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக கி. நாராயணசாமி மற்றும் ந. முத்துக்குமார் சிறுமுகை - மேட்டுப்பாளையம்