குன்னூர் வியாபாரிகள் சங்கம் சார்பாக மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நகராட்சி கடைகளின் வாடகையை 50 சதவீதம் முதல் 100 சதவீகிதத்திற்குள் மட்டும் உயர்த்தி தருவதாக
தமிழக முதல்வர் கடந்த 01:04 :2021 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தரும்படி தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 01: 12 :2021 ஆம் தேதி 900 நகராட்சி கடைகளில் நேற்று காலை 11 மனியளவில் வெள்ளைக் கொடிகளை ஏற்றினர்.
இதற்கான ஏற்பாடுகளை குன்னூர் வியாபாரிகள் சங்கம் மற்றும் தோழமை சங்கங்களின் சார்பில் செய்தனர். அதனைத் தொடர்ந்து குன்னூர் வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஸ்வரன் கூறுகையில் வியாபாரிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வெள்ளை கொடி தொடர்ந்து பறக்கும் என்றும் தங்களின் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று கூறினார்.