தொடர் மழை காரணமாக மூன்று வீடுகள் இடிந்து சேதம்


தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டு பெய்த கனமழையால் தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சி பகுதியில் மூன்று வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. இதில் நேற்று மாலை முதல் இரவு வரை தொடர்ந்து பெய்த கனமழையால் பெருமாள்புரம் ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவர் வீடும்,அதே பகுதியில் பழனிச்சாமி என்பவரது வீடும், பெருமாள்புரம் சிவன் கோயில் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவரது வீடும் தொடர்ந்து பெய்த கன மழையால் இடிந்து சேதம் அடைந்துள்ளது, இந்த  இடிபாடுகளில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும், காயங்கள் ஏற்படவில்லை.

தேனி செய்தியாளர்

ரா.சிவபாலன்.

Previous Post Next Post