வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு வேலூர் காட்பாடியில் உள்ள அண்ணா அரங்கம் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு 166 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூபாய் 46 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .
உடன் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் பா.கார்த்திகேயன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி. அமலு மாவட்ட வருவாய் அலுவலர் .வராஹ குருஜி சு.சரவணன் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.