கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் மற்றும் மந்தித்தோப்பு கிராமத்தில் பழுதான மின் கம்பத்தை புதியதாக அமைக்க வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி மேற்கு ஓன்றிய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் மற்றும் மந்தித்தோப்பு கிராமத்தில் பழுதான டிரான்ஸ்பார்ம்,மின் கம்பத்தை புதியதாக அமைக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தை வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். பாஸ்கரன் தலைமையில்,
ஒன்றிய செயலாளர் ஆணிமுத்துராஜ் முன்னிலையில் முற்றுகையிட்டனர்.பின்னர் மின்சார வாரிய செயற் பொறியாளர் சகர்பானிடம் மனு அளித்தனர்,இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பூமி பாலகன், ஓன்றிய இளைஞர் அணி செயலாளர் மைக்கேல் பிரபு, ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் அய்யாத்துரை, ஒன்றிய பிரதிநிதி ஆதி பாண்டியன்,
ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர் கார்த்திகேயன், பாண்டவர்மங்கலம் கிளை செயலாளர் சுப்பையா,சமுக ஆர்வலர்கள் ராஜன், மந்தித்தோப்பு கிளை துணை செயலாளர் முத்து பாண்டியன், உள்ளிட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.