சென்னையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.!


சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி சாலையில் வழியாக சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்து கரும்புகை வெளியேறியதால் கார் உரிமையாளர் சூரஜ் குமார் காரை சாலையோரம் நிறுத்தி வெளியேறியதால் உயிர்சேதமின்றி தப்பினார்.

கரும்புகை வெளியேறிய நிலையில் காரின் முன்பகுதியில் தீ பிடித்து மளமளவென பரவி கார் முழுதும் எரிந்து நாசம்.

இந்த விபத்து சம்பவம் காரணமாகவும், சாலையின் மறுபுறம் சென்றுகொண்டிருந்த பொதுமக்களும் விபத்தை விடீயோ எடுக்க முற்பட்டதன் காரணமாக அரை மணி நேரத்திற்கும் மேலாக ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல்.

சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மீனம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை. மேலும், போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

Previous Post Next Post