கோவில்பட்டியில் இந்திய பேக்கேஜிங் பயிற்சி நிறுவனம் மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்திய கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் காண பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து கையேட்டினை வெளியிட்டார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புவிசார் குறியீடு பெற்ற கடலைமிட்டாய் தயாரிப்பு தொழிலை மேம்படுத்தும் வகையில் தனியார் திருமண மண்டபத்தில் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள்
மற்றும் உறுப்பினர்கள் இந்திய பேக்கேஜிங் பயிற்சி நிறுவனம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்தும் 1 நாள் பயிற்சி முகாமினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
உற்பத்தியாளர்களுக்கான தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட பயிற்சி கையேட்டினையும் வெளியிட்டார்.
பின்னர் விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் தொழில் வளர்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்ந்து வருவதாகவும் குறிப்பாக கோவில்பட்டி கடலை மிட்டாய் தொழில் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வருவதாகவும் பேசினார்.
இந் நிகழ்வில் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், தாசில்தார் அமுதா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சுவர்ணலதா, சென்னை மண்டல தலைவர் பொன்குமார் கடலைமிட்டாய் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கார்த்திக் ஈஸ்வரன், செயலாளர் கண்ணன்,
பொருளாளர் தினேஷ்,மற்றும் விற்பனையாளர் உள்ளிட்ட கடலை மிட்டாய் சங்க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.