சென்னை மாநகரில் நேற்று காலை முதல் தொடர்ந்து வரலாறு காணாத பலத்த மழை கொட்டியது. இதனால், சாலையிலும் மழைநீர் ஆறாக ஓடியது. உடனடியாக நீரை அகற்றும் படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தர விட்ட தைத் தொடர்ந்து அமைச்சர்களும், அதிகாரிகளும் நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில், திருச்சி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக ரிப்பன் மாளிகைக்கு நேரில் சென்று மழை நீரை அகற்றும் பணிகளை விரைந்து நடக்க முடுக்கி விட்டதுடன், சென்னைரிப்பன் மாளிகை,பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில், கன மழையால் சென்னை மாநகரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற் கொண்டார்.
பின்னர் அவர் கூறுகையில்...வானிலைக் கணிப்புகளையும் மீறிக் கொட்டித் தீர்க்கிறது மழை. எதிர்பாராத மாமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து திரும்பியவுடன், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்திற்கு வந்து, எடுக்கப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன். நிலைமை விரைந்து சீர்செய்யப்படும்.
https://photos.app.goo.gl/hucdEZ19WuKU59m8A
பொதுமக்களும் கவனமுடன் தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்வதோடு, மழைக்கால வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த ஆய்வின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணை யர் ககன்தீப் சிங் பேடி,மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
#ChennaiRains2021 #ChennaiRain #MKStalin #MKStalinGovernment