சேலம் ஒய்.எம்.சி.ஏ.ஹாலில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் முன்னிட்டு அன்பின் கரங்கள் அறங்கட்டளை, ஜென்னிஷ் அறங்கட்டளை, ரோட்டரி கிளப் ஆப் சேலம் விங்ஷ் மற்றும் வாசன் ஐ கேர் இணைந்து நடத்தும், கிறிஸ்துமஸ் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி கலந்து கொண்டு கேக் வெட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை அன்பின் கரங்கள் மாற்றுத்திறனாளி அறக்கட்டளை தலைவர் மணிகண்டன்,கர்லின் எபி செய்திருந்தனர்.மேலும் இந்நிகழ்வில் இம்மானுவேல், சார்லஸ் ஜான்,கிறிஸ்டோபர், ராஜ்குமார்,சுகந்தி,உஷா, நந்தினி,நிர்மலா,பிரபாகர், கிருஷ்ணமூர்த்தி,டேவிட் ராஜன்,மணிகண்டன்,மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.