நெல்லை மாவட்டம் கோவைகுளம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மாரி. காய்ச்சலுக்காக பாதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள சித்த மருத்துவமனையில் சிகிச்சைகாக சென்றுள்ளார். அப்பொது அவருக்கு ஊசி செலுத்தப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து உடல்நிலை மிகவும் மோசமானதால் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது மாரியை பரிசோதித்த மருத்துவர்கள் சரியான முறையில் ஊசி செலுத்தப்படாததால் நரம்பு மற்றும் ரத்த நாளங்கள் சேதம் அடைந்திருப்பதாக தெரிவித்தனர். இதனால் கால்களை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரில் மாரியை சேந்த்துள்ளனர். அப்போது சிகிச்சை பலனின்றி மாரி இறந்துள்ளார். இதனைத்தொடர்ந்து மாரியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் தவறான சிகிச்சை அளித்தது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையிலான மருத்துவ குழுவினர் மருத குளத்தில் உள்ள மாரி சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையை இழுத்து மூடி சீல் வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மூன்றடைப்பு காவல் நிலையத்தில் மாரியின் தந்தை அளித்த புகார் தொடர்பாக பதியப்பட்ட வழக்கு மரணத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்படுதல் (304) போலியாக மருத்துவர் என கூறி சிகிச்சை அளித்தல் 420 ,417 உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து சித்த மருத்துவர் சக்தி மற்றும் அருண் செல்வம் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் மருத்துவமனையில் ஊசி செலுத்திய செவிலியர் இசக்கியம்மாளையும் கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்தியாளர் அஹமது ஜான் புகைப்படக்காரர் சாதிக்