இணைய வழியில் தமிழ் கற்பிக்க விண்ணப்பிக்கலாம்!: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!


இணையவழியில் தமிழ் கற்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

தமிழ் இணைய கல்வி கழகம் என்பது தமிழ்நாடு அரசின் தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இணையவழியில் உலகெங்கும் உள்ளவர்களுக்கு தமிழ் கற்பித்தலில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் முதன்மையான நோக்கமாகும்.

மேலும் தமிழ் இலக்கியம் கலை கலாசாரம் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இணையவழியில் தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான விபரங்களை தமிழ் இணைய கல்வி கழகம் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ள ஆசிரியர்கள் தகுதியான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 


இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ள ஆசிரியர்கள், தகுதியான இளைஞர்களின் விவரங்கள் பெறப்பட்டு, தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணைய தளத்தில் பட்டியல் வெளியிடப்படும்.

அப்பட்டியலிலுள்ள தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் / இளைஞர்களைக் கொண்டு தமிழ் இணையக் கல்விக்கழகம் வழியாகவோ அல்லது உலகளவில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் வாயிலாகவோ இணைய வழியில் கற்பித்தல் சேவைகள் வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தங்களின் விவரங்களைத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணைய தளத்தில் (www.tamilvu.org/eteach_reg/) உள்ள படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, மேற்படி இணையதளத்தில் 10-01-2022க்குள் உள்ளீடு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கற்பிக்கும் வகுப்புகளின் கால அளவிற்கேற்ப மதிப்பூதியம் நிர்ணயம் செய்யப்படும்.

#tamil #TNGovt #application

Previous Post Next Post