சேலம் குகை ராமலிங்கசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மளிகை வியாபாரி ஆறுமுகம். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான சுமார் 250 சதுர அடி உள்ள பழுதடைந்த பராமரிப்பின்றி சிதிலமடைந்து இருந்த பழைய வீடு ஒன்றை வாங்கி உள்ளார் இந்த வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வந்ததாக தெரிய வருகிறது சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து 20 நாட்களாக மழை பெய்து வருவதால் வீட்டின் மேற்கூரையை மட்டும் அகற்றிவிட்டு கட்டுமான பணியை ஆறுமுகம் மேற்கொள்ளவில்லை அதிக மழையினால் சுவர் ஈரமாக இருந்ததை தெரியாமல் அந்த பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான வாலிபர் ராஜேஷ் என்பவர் நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக சிதலமடைந்த அந்த வீட்டுக்கு சென்றுள்ளார் அப்பொழுது சுவர் இடிந்து அவர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார் இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் இடிந்த சுவருக்கு அடியில் வாலிபர் சடலமாக இருப்பதைக் கண்டு சேலம் செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் அதனடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்பொழுது சேலம் முழுவதும் கடந்த 20 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் இப்பகுதியில் பராமரிப்பின்றி பழுதடைந்த வீடுகள் அதிகம் உள்ளது இந்நிலையில் நேற்றிரவு ராஜேஷ் என்ற கூலி தொழிலாளி இந்த பகுதியில் உள்ள ஆறுமுகத்திற்கு சொந்தமான பழுதான வீட்டுக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்று உள்ளார் அப்போது சுவர் ஈரமாக இருந்த தெரியாமல் சுவர் மீது கை வைத்ததாக தெரிய வருகிறது இதனால் அவர் மீது சுவர் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் இதுகுறித்து காவல்துறை உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் அப்பகுதி மக்கள்.