தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் ஆய்வு கூட்டம்!


தூத்துக்குடியில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணி தொடர்பான ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியலுக்கான பார்வையாளர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணி தொடர்பான ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியலுக்கான பார்வையாளர் தலைமை நிர்வாக அலுவலர் பெருநகர வளர்ச்சி ஆணையம் ஆ.லட்சுமி, மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், ஆகியோர் தலைமையில் இன்ற (29.12.2021) நடைபெற்றது. 

வாக்காளர் பட்டியலுக்கான பார்வையாளர் தலைமை நிர்வாக அலுவலர் பெருநகர வளர்ச்சி ஆணையம் ஆ.லட்சுமி, பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில், 01.01.2022 தேதியினை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2022 நடைபெற்று கொண்டிருக்கிறது. மேற்படி கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பிழையில்லாத நிலையை உருவாக்கிட அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோருக்கு உரிய நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த பணியினை இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் படி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என பேசினார். இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது அமுதா, வருவாய் கோட்டாட்சியர்கள் சிவசுப்பிரமணியன் (தூத்துக்குடி), சங்கரநாராயணன் (கோவில்பட்டி), அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

Previous Post Next Post