உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிராமண பெண் சமைத்த உணவை தலித் மாணவர்கள் சாப்பிட மறுத்த விவகாரம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் சாம்பவத் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், சுனிதா தேவி என்ற தலித் பெண் சமைத்த உணவை உயர் சாதி மாணவர்கள் சாப்பிட மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாவட்ட கல்வி அதிகாரி சுனிதா தேவியை பணி நீக்கம் செய்துவிட்டு, பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த புஷ்பா பட் என்பவரை நியமித்துள்ளார்.
மாவட்ட கல்வி அதிகாரியின் இந்த நடவடிக்கைக்குப் பலரும் கண்டம் தெரிவித்து வரும் நிலையில், புஷ்பா பட் சமைத்த உணவை தலித் மாணவர்கள் சாப்பிட மறுத்துள்ளனர். தலித் மாணவர்களின் இந்த நடவடிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.