தூத்துக்குடியில் வீடுகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியே எடுப்பதற்கு இலவச மோட்டார் வசதி - அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு.!*


தூத்துக்குடி மாநகரில் கடந்த 27ஆம் தேதி பெய்த கன மழையினால் பல இடங்களில் மழை நீர் தேங்கி இன்னும்  வற்றாத நிலை உள்ளது இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் மழை நீரை வெளியே எடுப்பதற்கான முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ராட்சத மோட்டார்கள் மூலம் மழை நீரை வெளியே எடுத்து வருகின்ற பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது 

அதே நேரத்தில் வீடுகளில் உள்ள மழைநீரை மக்கள் தங்கள் மோட்டார்கள் மூலம் பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். மோட்டார் இல்லாத சிரமப்படும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சி மூலம் மோட்டார்கள் வழங்குவதற்கான   நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதற்காக  ஒரு ஹெச்பி 10 அதிக திறன் கொண்ட 50 மோட்டார் கோவையிலிருந்து வாங்கப்பட்டுள்ளன 

இவை  அனைத்தும் தூத்துக்குடி மாநகராட்சி வந்தடைந்தன இந்த மோட்டார்களை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு செய்து ரஹமத் நகர் முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வடிவதற்கு பொதுமக்கள் வீடுகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்காக மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

Previous Post Next Post