பெண்ணிடம் பறிக்கப்பட்ட 3 ½ பவுன் தங்க செயின்கள் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைப்பு


தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணிடம் பறிக்கப்பட்ட 3 ½ பவுன் தங்கசெயின்கள் மீட்கப்பட்டு, தங்கசெயின்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.

கடந்த 26.12.2021 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் பெயின்ட் கம்பெனி பகுதியில்,  கவிதா (43), க/பெ. ராஜேஷ், சண்முகபுரம், தூத்துக்குடி என்பவர் நடந்து சென்றபோது அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் கவிதாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 ½ பவுன் எடையுள்ள 2 தங்கசெயின்களை பறித்துச் சென்றுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் இச்சம்பவத்தை பார்த்த உடன் அவரை விரட்டி சென்று பிடிக்க முற்பட்டபோது, அந்த எதிரி தான் மாட்டிவிடுவோம் என்று பயந்து பறித்த 2 தங்கசெயின்களை கீழே போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். மேற்படி இளைஞர் தங்கசெயின்களை எடுத்து தென்பாகம் காவல் நிலையத்தில் உரியவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுகொண்டு ஒப்படைத்துள்ளார்.

இதுகுறித்து கவிதா அளித்த புகாரின்பேரில் தென்பாகம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட எதிரியை தேடி வருகிறார். மேற்படி தங்கசெயின்களை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தங்கசெயினின் உரிமையாளரான கவிதா மற்றும் அவரது கணவர் ராஜேஷ் ஆகியோரை நேரில் அழைத்து ஒப்படைத்தார். மேலும் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை விரட்டி சென்று பிடிக்க முற்பட்ட அந்த இளைஞருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் கணேஷ்குமார், ஷாமளா தேவி, பவித்ரா மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Previous Post Next Post