தூத்துக்குடியில் வருகிற 30ம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து முத்தையாபுரம் துணை மின்நிலையம் உதவி செயற்பொறியாளர் சாமுவேல் சுந்தர்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி முத்தையாபுரம் துணை மின் நிலையத்தில் வருகிற 30ம் தேதி (வியாழக்கிழமை) புதிதாக 110 கிலோ வாட் சூரியஒளி மின்கருவி இணைப்பு பணி நடக்கிறது.
இதன் காரணமாக முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரப்பட்டி, அனல்மின் நகர், கேம்ப்-1, கேம்ப்-2, துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகள், தோப்புத்தெரு, வடக்கு தெரு, முள்ளக்காடு, பொட்டல்காடு, அபிராமிநகர், சுனாமிநகர், சவேரியார்புரம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் 11 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.