தூத்துக்குடி விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு துறைக்கு, 2 அதிநவீன இன்ஜின் பொருத்தப்பட்ட அவசரகால மீட்பு ரப்பர் படகு வாங்கப்பட்டது. இதை விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு துறைக்கு விமான நிலைய இயக்குனர் N. சுப்ரமணியன் ஒப்படைத்தார்.
பின்னர் புதிய மீட்பு படகுக்கான பரிசோதனை ஓட்டம் முடிவைத்தானேந்தல் கிராமம் அருகே உள்ள குளத்தில் நடைபெற்றது. இந்த பரிசோதனை ஓட்டத்தை விமான நிலைய இயக்குனர் N. சுப்பிரமணியன் துவக்கி வைத்து, சோதனை ஓட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது... "இந்த இரண்டு ரப்பர் படகுகளின் விலை 9.78 லட்சம். ஒரே சமயத்தில் 12 பேரை காப்பாற்றலாம், இந்த படகுகளின் உள்ளே முதல் உதவிக்கான உபகரணங்கள் மற்றும் லைப் ஜாக்கெட் , மிதக்கும் உபகரணம் ஆகியவை அடங்கியதாகும்" என கூறினார்
இவ்விழாவில் விமான நிலைய கட்டுமான பிரிவு இணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன். தீயணைப்பு துறை மேலாளர்கள்.B. கணேஷ் மற்றும் J S J. செல்வராஜ் விமான நிலைய பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விமலா மற்றும் விமான நிலைய மேலாளர் .S. ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.