திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானவர்கள் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு சீட் கேட்டு மாவட்ட தலைவர் கிருஷ்ணனிடம் மனு அளித்தனர்.
இதில், காங்கிரஸ் கட்சியின் மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் தீபிகா அப்புக்குட்டி விருப்ப மனு அளித்தார். திருப்பூர் மாநகராட்சியில் பெண்கள் வார்டாக ஒதுக்கப்பட்டு உள்ள உள்ள 28 வார்டுகளிலும் போட்டியிடுவதற்கு அவர் விருப்ப மனு அளித்தார்.
உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சியில் பெண்கள் பங்களிப்பு அதிகம் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்ப்படுத்தவே மாநகராட்சியில் பெண்கள் வார்டாக ஒதுக்கப்பட்டுள்ள 28 வார்டுகளுக்கும் விருப்பமனு அளித்துள்ளதாக தீபிகா அப்புக்குட்டி தெரிவித்தார்.