'தூத்துக்குடி பிரஸ் கிளப்' சார்பில் உறுப்பினர்களுக்கு 2022 ம் ஆண்டுக்கான டைரி, காலண்டர்


'தூத்துக்குடி பிரஸ் கிளப்' சார்பில் அதன் உறுப்பினர்களுக்கு 2022 ம் ஆண்டுக்கான டைரி மற்றும் காலண்டர் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி பிரஸ் கிளப்' சார்பில் ஆண்டுதோறும் டைரி மற்றும் காலண்டர் பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி பிரஸ் கிளப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதனையடுத்து

2022ம் ஆண்டிற்கான காலண்டர் மற்றும் டைரி வழங்கும் நிகழ்ச்சி பிரஸ்கிளப்பில் வைத்து நடைபெற்றது. 


பிரஸ் கிளப் கௌரவ ஆலோசகர் அருண் முதல் டைரி காலண்டரை வெளியிட செயற்குழு உறுப்பினர் அகமது ஜான் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம்,  செயலாளர் இசக்கிராஜா, பொருளாளர் செந்தில்முருகன், இணைச்செயலாளர் சிதம்பரம், கௌரவ ஆலோசகர் ஆத்திமுத்து, சட்ட ஆலோசகர் சரவணன், செயற்குழு உறுப்பினர்கள் கோபால்சாமி, அண்ணாதுரை, காதர் முகைதீன்,  பார்த்தீபசங்கர், மோகன்ராஜ், மாரிமுத்துராஜ், முரளிகணேஷ், முத்துராமன், ராஜு, கண்ணன், உள்பட பிரஸ்கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post