அன்னபூரணியின் 2வது புருஷன் சிலையை உடைத்த 3வது புருஷன்..!!


கடந்த சில வாரங்களாக அன்னபூரணி அம்மா என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பெண் சாமியார் ஒருவர் தொடர்பான காணொளிகள் பரவி வருகிறது. அதில் மஞ்சள் சிவப்பு என பள பளக்கும் புடவை, உதட்டில் லிப்ஸ்டிக் என சினிமா நடிகை போல காரிலிருந்து கெத்தாக இறங்கிவந்து தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு அவர் அருள்பாலிப்பது போன்று அந்த வீடியோ காட்சிகள் அமைந்துள்ளது. 

அவருக்கு பூ, பன்னீர் தூவும் ஒரு கூட்டம், தன்னை அம்மனாகவே பாவித்துக் கொண்டு  பரவசமடையும் அன்னபூரணி, அதனால் அவரை சுற்றி  உள்ளவர்கள் தங்கள் நிலையை மறந்து கதறிக் கதறி அழுவது போன்ற காட்சிகளும் அந்த வீடியோக்களில் இடம் பெற்றுள்ளது.

அதிலும் ஒரு பக்தர் ஒரு படி மேலே போய்.. மேல்மருவத்தூரில் மக்கள் கும்பிடும் உண்மையான ஆதிபராசக்தி அம்மனே இவர்தான்.. அந்த அம்மன்தான் இப்போது அவதாரமாக வந்துள்ளனர். பங்காரு அடிகளார் கும்பிடும் அம்மனே இவர்தான். அது அவருக்கும் விரைவில் புரியும் என்று கூறி அதிர்ச்சி தந்தார்.

இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. யார் இந்த அன்னபூரணி,  திடீரென சாமியார் கோலத்தில் என்று பலரும் ஆச்சரியத்துடன் அந்த வீடியோக்களை பார்த்து வருகின்றனர்.

பலரும் யாரிந்த அன்னபூரணி என கேள்வி எழுப்பி வரும் நிலையில், அந்த கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு தனது எதிர்வீட்டில் வசித்த லட்சுமி என்ற பெண்ணிக் கணவர் அரசு என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அதற்காக லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் 

நிகழ்ச்சியில் பஞ்சாயத்துக்கு வந்தவர்தான் அன்னபூர்ணி, கள்ளக்காதலுக்காக தான் கட்டிய கணவனையும், குழந்தைகளையும் பரிதவிக்க விட்டு வேறொரு எதிர் வீட்டு பெண்ணின் கணவர் அரசு என்பவருடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவர் தான் இந்த அன்னபூரணி.

சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் நீ செய்வது தவறு, இன்னொரு பெண்ணின் கணவனுடன் தொடர்பில் இருப்பது தவறு என்று லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த அன்னபூர்ணிக்கு எவ்வளவோ படித்து படித்து சொல்லியும், முடியவே முடியாது வாழ்ந்தால் அரசுவுடன்தான் வாழ்வேன் என அடுத்தவரின் கணவனை ஆட்டயப்போட்டவர்தான் இந்த அன்னபூர்ணி.

இப்படிப்பட்ட அன்னபூரணி திடீரென அம்மனாக அவதாரம் எடுத்துள்ளதாகவும், மக்களுக்கு அருள்வாக்கு கூறி வருவது போன்ற வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு கள்ள காதலில் சிக்கிய அன்னபூரணி அடுத்த சில வருடங்களுக்குள் எப்படி சாமியாக அவதாரம் எடுத்தார் என்று மக்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். 

இது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், அன்னபூரணியின் கதை குழப்பமாக உள்ளது, மக்கள் எந்த அளவிற்கு ஏமாறுபவர்களாக இருக்கிறார்கள் என்பதே இதன் மூலம் நேரடியாகவே பார்க்க முடிகிறது. 

அன்னபூரணி அருள்வாக்கு சொல்கிறேன் என்பதை பார்க்கும் பொழுது நகைச்சுவையாக உள்ளது என விமர்சித்துள்ளார். தற்போது எதிர்வீட்டு பெண்ணின் கணவன் அரசுவுடன் வீடி எடுத்து வசித்து வரும் அன்னபூரணி, அரசுவுடன் இணைந்து செங்கல்பட்டில் சிறிய அளவில் மடம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். 

சொல்வதெல்லாம் பஞ்சாயத்தை அறிந்த பலரும், இது போன்ற போலி சாமியார்களை உடனே தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற நபர்களால் தான் இந்துமதத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இது போன்ற போலி சாமியார்களை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தவேண்டும் என்று இணையதளத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த நிலையில்தான் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, நான் ஓடி ஒளிந்து விட்டதாக வதந்தி பரவுகிறது. அதனால் நேரடியாக வந்திருக்கிறேன். நான் இதுவரை என்னை சாமி என்றோ ஆதிபராசக்தி என்று கூறவில்லை. யாரிடமும் என்னை நம்புங்கள், என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நான் பேசவில்லை. 

என்னை பார்க்கும் போது அவர்களுக்கு ஒரு உணர்வு ஏற்படுகிறது. அது ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஏற்படுகிற ஒரு உணர்வு. அப்படித்தான் மக்கள் என்னை நாடி வருகின்றனர். ஆனால் அந்த உணர்வை பலர் கொச்சைப் படுத்துகின்றனர். 

நானும் அரசுவும் இணைந்ததே இந்த நோக்கத்திற்காகத்தான். எங்கள் இருவருக்குள்ளும் ஒரே சக்தி தான் இருந்திருக்கிறது. அது இப்போது தான் எங்களுக்கு தெரிகிறது. நாங்கள் விரும்பி வேறு காரணத்திற்காக திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்தால் எங்கேயோ தலைமறைவாக இருந்து இருக்க முடியும். 

அந்த சக்தியின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதனால்தான் ஊடக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறோம். அதனால்தான் நீங்கள் எங்களை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனக்குள் இருக்கும் சக்தியை புரிந்து கொள்ளாமல் என்னை அவமானப்படுத்த முயற்சிக்கிறீர்கள் என கூறியுள்ளார்,

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பேஸ்புக், ட்விட்டர் முழுக்க கடந்த 2 நாட்களாக இவரின் வீடியோதான் டிரெண்டிங் டாப்பிக். இந்த வீடியோக்களை ஒவ்வொன்றாக பார்த்ததில் சில வீடியோக்கள் சிரிப்பு மூட்டும் விதமாகவும், சில வீடியோக்கள்.. யார்டா நீ (சமுத்திரக்கனி குரலில் படிக்கவும்) என்று சொல்லும் அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும் இருந்தது.

அன்னபூரணியின் அன்னபூரணியின் 2வது புருஷன் சிலையை உடைத்த 3வது புருஷன்...@ செய்தி

இது எப்ப....?

இவருக்கு முன்னாடி.... இவருக்கு பின்னாடி... என கலாய்த்து மீம்ஸ்களும் பறந்து கொண்டிருக்கின்றன.

Previous Post Next Post