விளையாட்டுத்துறையில் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு வாய்ப்பு கிடைக்கப்பெற்று அது உருவாக்கப்பட வேண்டும் என்ற முயற்சியில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என கனிமொழி கருணாநிதி எம்.பி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 11 தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி டிசம்பர் 16 முதல் 25-ம் தேதி வரை போட்டிகள் நடக்க உள்ளன இப்போட்டியில் மொத்தம் 30 மாநில ஹாக்கி அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.
540 வீரர்கள் பங்கு பெற்று மொத்தம் 50 போட்டிகள் நடக்க உள்ளன இப்போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை இந்திய ஜூனியர் அணி தேர்வு செய்யப்படுவர் தொடர்ந்து 10 நாட்கள் இப்போட்டி நடைபெற உள்ள போட்டியை நடத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன
இந்நிலையில் இன்று தனியார் பொறியியல் கல்லூரியில் வைத்து செய்தியாளர் சந்திப்பை நடத்திய கனிமொழி கருணாநிதி எம்.பி
கிராமப்புற இளைஞர்கள் இளம் பெண்களுக்கு விளையாட்டுத்துறையில் வாய்ப்பு கிடைக்கப்பெற வேண்டும் அது உருவாக்கப்பட வேண்டும் என்ற முயற்சியில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்
பாரம்பரிய மிக்க கோவில்பட்டி நகரில் நடைபெறும் இப்போட்டி மிகவும் பெருமைக்குரிய தாக இருப்பதாகவும் தெரிவித்தார்
பின்னர் கிருஷ்ணா நகரில் உள்ள போட்டி நடைபெறும் இடத்தை பார்வையிட்டு வீரர்களுக்கு செய்யபட்டு உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்..