டிசம்பர் 28
கோவை சூலூர் பேரூராட்சியில் இந்திய தேசிய காங்கிரசின் 137ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு கொடியேற்றுவிழாவும் காங்கிரஸ் பொற்கால ஆட்சியில் நடந்த வளர்ச்சித்திட்டங்களைப்பற்றியும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்ததோடு மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சிறப்பும் செய்யப்பட்டது
விழாவின் முத்தாய்ப்பாக இந்திய தேசிய காங்கிரசின் 137ம் ஆண்டு துவக்கநாளை முன்னிட்டு 137 மகளிர்களுக்கு சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் தையல் இயந்திரம் கொடுக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது
சூலூர் பேரூராட்சி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கவேல் தலைமையில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க இவ்விழாவில் மூத்த தலைவர்கள் காமாட்சி மற்றும் ஐஎன்டியுசி பழனிசாமி முன்னிலை வகித்தனர் அவர்களோடு கட்சி நிர்வாகிகளான உதயகுமார் சன்முகம் சரவணன் செந்தில் தாமோதரன் பொன்னுச்சாமி செல்வி மற்றும் தமிழக விவசாயப்பிரிவின் மாநிலச்செயலாளர் வழக்கறிஞர் சூலூர் சு தமிழரசன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்ததோடு கலந்து கொண்ட பொதுமக்கள் அணைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்
ஆ அர்ச்சுனன்
தமிழ் அஞ்சல்
சூலூர் தொகுதி நிருபர்