பிரதமர் மோடிக்கு ரூ.12 கோடியில் மெர்சிடிஸ் கார்.!!

 

பிரதமர் மோடிக்கு ரூ.12 கோடியில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய Mercedes-Maybach S650 Guard ரக கார் பிரதமர் நரேந்திர மோடிக்காக வாங்கப்பட்டு உள்ளது.

இந்தக் காரில் VR10 என்ற உயர் ரக பாதுகாப்பு அம்சம் உள்ளது. உலகெங்கும் தயாரிக்கப்படும் கார்களில் இருப்பதிலேயே உயர்ந்த பாதுகாப்பு அம்சம் கொண்ட கார் இதுவாகும். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த கார்கள் வாங்கப்பட்டு உள்ளன.

Mercedes-Maybach S650 Guard ரக கார் ஏகே 47 துப்பாக்கி தோட்டாக்களின் தாக்குதலை தாங்கும் சக்தியை கொண்டதாகும். வெடிகுண்டு தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும், விபத்து ஏற்பட்டால் தானாக பெட்ரோல் டாங்க் மூடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இதேபோல், விஷ வாயு தாக்குதல் ஏற்பட்டால் காரில் சுவாசிக்க ஏதுவாக செயற்கை சுவாசக் கருவியும் இதில் உள்ளது. இந்தக் காரின் டயர்கள் ஆபத்து நேரங்களில் பாதிப்படைந்தாலும் தொடர்ந்து இயங்கும் தன்மை கொண்டதாகும். இப்படிப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காரில் தான் பிரதமர் மோடி பயணிக்கிறார்.ஒரு காரின் விலை ரு.12 கோடி எனக் கூறப்படுகிறது.

#Modi #MercedesBenz #mercedesmaybach

Ahamed

Senior Journalist

Previous Post Next Post